TamilsGuide

வடக்கில் கூறியது போன்று சஜித்தால் தெற்கில் கூறமுடியுமா?

”எதிர்க் கட்சி தலைவர் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக வடக்கில் கூறியது போன்று தென் பகுதிக்கு சென்று கூறமுடியுமா?“ என இலஞ்ச, ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கிளிநொச்சியில் தெரிவித்திருந்தார்.

வடக்கில் வாக்கு பெரும்பான்மையை பெறுவதற்காகவே சஜித் பிரேமதாச அவ்வாறான ஒரு கருத்தினைத்  தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரிடம் நாம் ஒரு கோரிக்கையினை முன்வைக்கின்றோம். 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக வடக்கில் கூறியது போன்று  தென் பகுதிக்கு சென்று  இந்த விடயத்தினைக் கூறமுடியுமா?

13 ஆவது திருத்தம் ஊடாக காணி உரிமை பொலிஸ் அதிகாரம் போன்றவை வழங்கப்படுவது நாட்டில் பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

வடக்கு மக்களை போன்றே தென்பகுதி மக்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்” இவ்வாறு ஜாமுனி கமந்த துஷார தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment