TamilsGuide

குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்காகிய 35 மாணவர்கள்

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பாடசாலையின் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

அந்தக் பாடசாலையில் கல்வி கற்கும் 5 வயது முதல் 10 வயது வரையிலான சிறுவர்கள் குழுவொன்றே இந்தக் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குளவி தாக்குதலின் போது, ​​மாணவர்களைக் காப்பாற்ற முயற்சித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலரும் குளவி தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளனர்

இதேவேளை குளவி தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிகிச்சைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment