TamilsGuide

அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்த ஜிவி பிரகாஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். அவரது நடிப்பில் வௌியான சீதா ராமம் திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த கிங் ஆப் கோதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் லக்கி பாஸ்கர்.

லக்கி பாஸ்கர் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாடல் நிறைவு செய்யப்பட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டதாக இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதேபோல தங்கலான் படத்தின் முதல் பாடலும் நிறைவு பெற்றதாக அவர் அறிவித்துள்ளார். விரைவில் இரண்டு பாடல்களும் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துலகர் சல்மான் நடித்து இருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் தனுஷை வைத்து வாத்தி படம் இயக்கியவர் ஆவார்.

படப்பிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

மேலும் ரசிகர்கள் ஜிவி பிரகாஷிடம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தை பற்றியும் , தனுஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் அப்டேட்டுகளை கேட்டனர். அதற்கு ஜிவி பிரகாஷ் அமரன் திரைப்பட பாடல்கள் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்தது, தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்மதம் பெற காத்துக் கொண்டு இருக்கிறேன் என்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் 4 பாடல்கள் உள்ளன, அது எப்பொழுது வெளிவரும் என மிகவும் எக்சைட்டாக உள்ளேன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல்களாக அது அமையும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
 

Leave a comment

Comment