TamilsGuide

பிரபாஸுக்கு எப்போ கல்யாணம்? - ராஜமவுலி அளித்த கிண்டல் பதில்

இந்திய சினிமா இயக்குனர்களுள் மிக முக்கியமானவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு மைல் ஸ்டோன் என்று சொல்லலாம். 1000 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரபாஸ் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இவரது திருமணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக, பிரபாஸ் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பது குறித்து இயக்குனர் ராஜமவுலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர்,

'பிரபாஸ் மிகவும் சோம்பேறி, 'திருமணம் செய்து கொள்வதிலும் சோம்பேறியாக இருக்கிறார். ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால்தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன்'. என்று மிகவும் கிண்டலாக கூறினார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபாஸ் கூறியதாவது, 'சோம்பேறி, கூச்ச சுபாவம், மக்களை சந்திக்க முடியாது. இந்த மூன்று பிரச்சினைகள் எனக்கு உள்ளன. நான் நிஜ வாழ்க்கையில்தான் கூச்சப்படுகிறேன், கேமரா முன் இல்லை'. என கூறினார்.

பிரபாஸ் தற்பொழுது கல்கி 2898 ஏடி படத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27 அம் தேதி வெளியாகவுள்ளது.
 

Leave a comment

Comment