TamilsGuide

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நியமனங்கள் தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் வழங்கிய நியமனங்கள் சட்டவிரோதமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

இதேவேளை தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும், நாங்கள் ஒரு அரசியல் கட்சியாக நாட்டு மக்களுக்கு எங்களின் கருத்தை தெரிவிக்க பல பணிகளைச் செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தக் கட்சியை அழிக்கும் வேலைத்திட்டத்தை இந்தக் கட்சியின் ஒரு குழு, முன்னெடுத்து வருகிறது. ஆனால் அது பயன் இல்லை என்றும் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நியமனங்கள் மற்றும் சந்திப்பு அழைப்புகள் முற்றிலும் அரசியலமைப்பிற்கு முரணானவை, சட்டவிரோதமானவை மற்றும் நெறிமுறையற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment