TamilsGuide

மக்கள் வாழத்தக்க பகுதிகளை விடுவிக்கும் பணி முன்னெடுப்பு

யுத்த காலப்பகுதியில் அடர்ந்த காடுகளாக அன்றி, வனப்பகுதியாக அடையாளமிடப்பட்ட, மக்கள் வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்கும் பணிகள் தற்போது படிப்படியாக நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது, உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் அறுதி உறுதி வழங்கும் வேலைத்திட்டம் தம்மிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மட்டும் 18,000 குடும்பங்களுக்கான உறுதி வழங்கவுள்ளதாகவும், வவுனியா மாவட்டத்திற்கு 10,000 உறுதிகள் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டதிற்கு 12,000 பேருக்கு உறுதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைப்பெறுவதாக தெரிவித்த காதர் மஸ்தான், மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றும் வாழக்கூடிய பகுதிகள் மட்டுமே அத்திட்டத்தின் கீழ் கையளிக்கக் கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.

அதன்படி இந்த வேலைத்திட்டத்தின் கீழ், காடற்ற பகுதிகளான மக்கள் வாழக்கூடிய பகுதிகளை மட்டுமே தாம் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment

Comment