TamilsGuide

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டானார்.

விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொன்றியுள்ளது.

கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர். அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்துள்ளது. படத்தில் மலையாள நடிகர் பிரேமலு புகழ் நஸ்லேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெலியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Comment