TamilsGuide

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் விசேட அறிவிப்பு

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

நிதி அமைச்சில் இ டம்பெற்ற இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

இதன்படி, தமது உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் எதிர்வரும் 12ம் மற்றும் 26ம் திகதிகளில் போராட்டத்தை நடாத்தவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment