TamilsGuide

வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மாலை 4 மணியளவில் நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளது

அத்தனகலு ஓயா வடிநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை படிப்படியாக தாழ்வான பகுதிகளில் அதிகரித்து வருவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கம்பஹா, ஜாஎல, கட்டான, வத்தளை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேச மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a comment

Comment