TamilsGuide

மாத்தறை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

மாத்தறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மாத்தறை மாவட்டம் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும்.

அதேபோன்றே இம்முறையும் வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணமாக மாத்தறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு 680 வீடுகள் காற்றினால் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் வெள்ளத்தில் சிக்குண்டு கடந்த 2 நாட்களில் மாத்திரம் 7685 குடும்பங்களைச் சேர்ந்த 28, 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு நிலையங்களில் 1430 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த தடவையும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment