TamilsGuide

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியள்ளது.

இந்த நிலையில், மூன்றாவது முறையாகவும் வெற்றியை தன்வசப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையை ஜனாதிபதி அங்கீகரித்ததோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் தொடர்ச்சியான வளர்ச்சியில் நம்பிக்கை வைக்கின்றேன்,”  என ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில்  தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment