TamilsGuide

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்  அறிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களில் சில பொது நிறுவனங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும்  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 5,000இற்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான வாகனங்களை கண்டுபிடிப்பதன் அவசியத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வலியுறுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே காணாமற்போன வாகனங்களை அடையாளங்காண்பது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment