TamilsGuide

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

இலங்கையின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.

இதன்காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுகள் பதிவாகி வருவதுடன், மண்சரிவு ஏற்படும் வீதிகளின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையும் காணப்படுகிறது.

இந்தநிலையில் பதுளை, கண்டி கேகாலை, களுத்துறை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment