TamilsGuide

நடிகர் சங்க கட்டிடத்துக்கு ரூ.1 கோடி நிதியளித்த தனுஷ்

நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க மேலும் ரூ.40 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சங்கத்தின் சார்பில் அதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.

முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் தாமாக முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி வழங்கிய நிலையில், அதைத்தொடர்ந்து தற்போது, நடிகர் தனுஷ், சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். அவருக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன், விஜய், நெப்போலியன் ஆகியோர் கட்டிட பணிகளுக்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்குள் கட்டிட பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment