TamilsGuide

மீண்டும் காமெடி டிராக்கில் கவனம் செலுத்தும் பிரித்விராஜ்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ் . சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். ஆடு ஜீவிதம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும்.

அதைத்தொடர்ந்து ப்ரித்விராஜ் குருவாயூர் அம்பல நடையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். விபின் தாஸ் இயக்கம் செய்யும் இப்படத்தில் பசில் ஜோசப், யோகி பாபு நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், ரேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்துள்ளார். அங்கித் மேனன் இசை அமைத்துள்ளார். கதையை தீப்பு பிரதீப் எழுதியுள்ளார்.

விபின் தாஸ் இதற்கு முன் ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குஞ்சிராமாயணம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவராவார்.

இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. பிரித்விராஜ் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக இருப்பதினால் மக்கலிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Leave a comment

Comment