TamilsGuide

குழந்தையின் உயிரைப் பறித்த கரட்

அநுராதபுரம் – சாலியவௌ பகுதியில் கரட் துண்டொன்று தொண்டையில் சிக்குண்டு, ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசையொன்றின் மீது குறித்த குழந்தையின் தாய் வைத்துள்ளார். இதன்போது மேசையிலிருந்த கரட் துண்டொன்றை குறித்த குழந்தை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அந்த கரட் துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்குண்டதை அடுத்து நொச்சியாகம வைத்தியசாலைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment