TamilsGuide

சர்பரோஸ் 2 விரைவில் வெளிவரும் - அமீர்கான்

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் 1999 -ல் வெளியான படம் 'சர்பரோஸ்'. இந்த படத்தை இயக்குனர் ஜான் மேத்யூ மாத்தன் இயக்கினார். இதில் கதாநாயகி சோனாலி பிந்த்ரே, நஸ்ருதீன் ஷா, முகேஷ் ரிஷி, பிரதீப் ராவத் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ஹிட்டானது. இந்த படம் தற்போது 25 ஆண்டுகளை கடந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக மும்பையில் ஒரு தியேட்டரில் இப் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தில் நடித்த நடிகர் அமீர்கான்,ஜான் மேத்யூ, மாத்தான், நசிருதீன்ஷா, சோனாலி பிந்த்ரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இப்படம் குறித்து பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அப்போது அமீர்கான் பேசியதாவது:-

இப்படத்தை 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக உள்ளது. இப்போது எனக்கு வயது அதிகமாகி விட்டதாக தெரியவில்லை.

இப்போது 'சர்பரோஸ்' 2 படம் பற்றி அறிவிப்பது சரியான பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a comment

Comment