TamilsGuide

ஐடென்டிட்டி - கதாநாயகியாக விறுவிறுப்பாக நடித்த திரிஷா

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் திரிஷா.

சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் திரிஷா தற்போது மலையாள நடிகர் டோவினோ தாமசுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அகில்பால் - அனஸ்கான் என 2 இயக்குனர்கள் இணைந்து இயக்கிய புதிய படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கடைசியாக '2018' படத்தில் நடித்திருந்தார். கேரளாவில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்துப் பேசிய படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கேரளா திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது 'ஐடென்டிட்டி' படத்தில் டோவினோ தாமஸ் - திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது இதில் திரிஷா தனது காட்சிகள் அனைத்திலும் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இப்படத் தயாரிப்புகுழு இது தொடர்பாக திரிஷாவை பாராட்டி உள்ளது. இப்படத்தில் விரைவாக காட்சிகளில் நடித்து முடித்ததற்கு திரிஷாவுக்கு படக்குழு நன்றி தெரிவித்தது. மேலும் படத்தின் இயக்குனர் அகில் பால், "உங்களுடன் பணிபுரிவது இனிமை வாய்ந்த ஒரு அனுபவமாக இருந்தது என குறிப்பிட்டார்.

Leave a comment

Comment