TamilsGuide

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கல்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில்  புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல் தாக்கியுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை  இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும்  தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் மின்னல் தாக்கம் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment

Comment