TamilsGuide

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை மற்றும் ஹப்புதளை, கண்டி மாவட்டத்தின் யடிநுவர மற்றும் உடுநுவர, கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை, தெஹியோவிட்ட, கலிகமுவ, வரக்காபொல மற்றும் கேகாலை பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம, இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணிவரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment