TamilsGuide

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடி கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Comment