TamilsGuide

வவுனியாவில் நுங்குத் திருவிழா

வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா நேற்று ஆரம்பமானது.

நிகழ்வின்போது, பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கலை நிலா கலையகத்தினால் குளக்கரையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நாடக ஆற்றுககையும் இதன்போது நடத்தப்பட்டது.

சுயாதீன இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற குறித்த நிகழ்வில் பெருமளான இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
 

Leave a comment

Comment