TamilsGuide

மூன்று நாட்களில் ஸ்டார் திரைப்படம் செய்துள்ள வசூல்.. 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் கவின். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த இன்று ரசிகர்களால் கவனிக்கப்படும் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாடா திரைப்படம் மாபெரும் வெற்றியைப்பெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஸ்டார் எனும் திரைப்படத்தை கொடுத்துள்ளார். இளன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் ஸ்டார் திரைப்படத்தை ரசிகர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், இப்படம் வெளிவந்து மூன்று நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஸ்டார் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் ரூ. 12 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டுமே ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment