TamilsGuide

அஜித் சம்பளத்தில் கை வைக்கும் லைக்கா

சோலியான் குடுமி சும்மா ஆடாதுன்னு பழமொழி இருக்கு. அது நடிகர் அஜித்குமார் விஷயத்தில் தான் சரியாக பொருந்தி இருக்கிறது. அஜித் இப்படித்தான் என்று ஒரு குறிப்பிட்ட காலமாகவே நமக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது. அதை மீறி அவர் ஒரு சில விஷயம் செய்யும் போது இவரு இப்படி எல்லாம் பண்ண மாட்டாரே என ஒரு நிமிடம் நம் மனசுக்குள் ஒரு சந்தேகம் வந்துட்டு போகும். அஜித் தரப்பிலிருந்து அவரை சுற்றி என்ன நடக்குதுன்னு வெளியே தெரிய வாய்ப்பில்லை.

ஏதாவது ஒரு சினிமா பிரபலங்கள் மூலம் தெரிந்தால் தான் உண்டு. அப்படி வலைப்பேச்சு பிஸ்மி மூலம் நமக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. அஜித் எப்பவுமே ஒரு படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் அடுத்த படத்தை பற்றி யோசிக்க மாட்டார்.

ஆனால் விடாமுயற்சி படம் பாதி கட்டத்தில் இருக்கும் போது அடுத்த படத்துக்கு கமிட் ஆகி அப்டேட் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்போம் சத்தம் இல்லாமல் ஹைதராபாத்தில் ஆரம்பித்துவிட்டது.

அப்போ விடாமுயற்சி படத்தோட சூட்டிங் என்ன ஆச்சுன்னு ஒரு சந்தேகமும் இருக்கு. துணிவு பணத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் ஆரம்பிப்பது ஒரு பெரிய இடியாப்ப சிக்கலாய் இருந்தது. இது எல்லாத்துக்குமே காரணம் லைக்காதான்.

அஜித்தின் விடாமுயற்சி படம் சூட்டிங் ஆரம்பிக்கப்பட வேண்டிய நேரத்தில் லைக்கா நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்தது. இதனால் அவர்களுடைய பணப்புழக்கம் அப்படியே சரிந்து விட்டது. அஜித்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் அவர்களுக்கு அதிகமாக இருந்தது.

அதனால் விடாமுயற்சி படத்தை தயாரிப்பதாக ஒத்துக் கொண்டார்கள். அஜித் இந்த படத்தின் படபிடிப்பை முழுக்க அஜர்பைஜான் நாட்டில் தான் நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அஜித் சொல்படி கேட்டு அஜர்பைஜானில் படபிடிப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் இந்தியன் 2, விடாமுயற்சி, வேட்டையன் என லைக்கா பெரிய ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறது என்ற பெயர் மட்டும் பெரிதாக இருந்தது. உண்மையில் லைக்கா பணத்தட்டுப்பாடு நிலைமையில் இருக்கிறது.

நடிகர் அஜித் இடம் உங்களால் தான் நாங்கள் அஜர்பை ஜான் நாட்டில் படபிடிப்பு நடத்தினோம். அதனால் இப்போது பட்ஜெட் அதிகமாகி விட்டது. உங்கள் சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என பேசி இருக்கிறார்கள். இது அஜித்துக்கு பயங்கர காண்டாக இருந்திருக்கிறது.

என்னமோ பண்ணிட்டு போங்க என்று தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார். அதுவும் குட் பேட் அக்லி படத்திற்காக 150 கோடிக்கு மேல் சம்பளமும் வாங்க இருக்கிறார். தன்னுடைய ஸ்டேட்டஸ் தெரியாமல் பேரம் பேசிய லைக்காவுக்கு பதிலடி கொடுக்கத்தான் இந்த படத்தின் வேலைகள் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் கமலும் லைக்காவின் இந்த போக்கு பிடிக்காமல் தான் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு டிம்மி கொடுத்துவிட்டு தக்லைப் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார். விடாமுயற்சியின் வேலைகள் பாதியிலேயே இருக்கும் போது அஜித் புதிய படத்தின் வேலையை ஆரம்பிப்பதற்கு லைகா நிறுவனம் பேசிய பேரம் தான் காரணம் என தெரிய வந்திருக்கிறது. 

Leave a comment

Comment