TamilsGuide

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மக்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம், வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளது. அவசரகால விசா, அவசரச் சான்றிதழ் போன்ற பயண ஆவணங்களின் அவசரத் தேவைகளுக்கு மட்டுமே இந்த வசதி அளிக்கப்படும்.
 

Leave a comment

Comment