TamilsGuide

சூர்யாவுடன் இணையும் பிரபல மலையாள நடிகர் - #சூர்யா44 அப்டேட்

பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக்களத்தில் படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்.

கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.

மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம். இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்பொழுது அவர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இப்படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தில் இதர்கு முன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தற்பொழுது கங்குவா படத்தின் வெளியீட்டிற்காக தயாராகிக் கொண்டு இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் , சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். 
 

Leave a comment

Comment