TamilsGuide

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது  அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என  ஈரான் எச்சரித்துள்ளது.

இது குறித்து ஈரானின்  அணுசக்தி ஆலோசகர் கமல் ஹராசி கருத்துத் தெரிவிக்கையில்” அணு ஆயுதம் கொண்டு தாக்கும் எண்ணம் ஈராணுக்கு  இல்லை என்றாலும் அதே நேரத்தில் எங்களுக்கான அச்சுறுத்தல் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கையில் மாற்றம் எடுக்க யோசிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர்  இடம்பெற்று வரும் நிலையில் ஹமாஸ் ஆதரவாளர்களான ஹொஸ்பெல்லா படையினர்  மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது, சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துாதரகம் தாக்கப்பட்டது.

இத்தாக்குதலையடுத்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment