TamilsGuide

பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு அழுத்தம் கொடுக்க  முயல்கின்றனர்

தேர்தலில் போட்டியிட்டாலும் கூட, பொதுஜன பெரமுனவில் நான்கு, ஐந்து பேரே நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மால்  வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது எனவும், அவ்வாறு ஒருவரை நிறுத்தினாலும்  கூட வெற்றிப்பெற முடியாது என்பது ஸ்ரீலங்கா பொதுஜனபெரனவுக்கு குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்திற்கு புரிந்துள்ளது.

பொதுஜன பெரமுனவினர் நாடாளுமன்றத்தை கலைத்து, அதன்மூலம் ரணில் விக்கமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்க  முயற்சிக்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேர் சேர்வார்களாக இருந்தால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். இந்த 113 பேரையும் பஷில் ராஜபக்ஷவால் சேர்க்க முடியும். ஆனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு உரிமையில்லை.

ஏனெனில் ரணில் விக்கிமசிங்க நாட்டின் பொருளாதாரத்தையும், கடன் பிரச்சினைகளையும் தீர்பேன் எனக்கூறி வாக்குறுதியளித்தே நாட்டை பொறுப்பேற்றார்.

இந்த பிரச்சினைகள் தற்காலிகமாக தீர்க்கப்பட்டாலும், நிரந்தரமாக தீர வேண்டுமாயின் சர்வதேச கடன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

அதற்கு, ஜீலை மாதம் வரைக்குமே கால அவகாசம் உள்ளது. ஏனெனில் அதன் பின்னர் நாடு தேர்தலை சந்திக்கவுள்ளது.

ஜுலை 17 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் ஜனாதி ரணில், கடனை திருப்பிச்செலுத்தும் சவாலில் வெற்றி காண வேண்டும்.

அதனை தவிர்த்து, ராஜபக்ஷர்களில் ஐவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக நாடாளுமன்றத்தை கலைப்பது பொறுமற்றது.

மேலும் அடுத்த ஜனாதிபதி யார் தெரிவு செய்யப்பட்டாலும், நாடாளுமன்றத்துடன் நிலையான ஆட்சியை கொண்டு நடத்த உரிமையை வழங்க வேண்டும்.

தேர்தலை தொடர்ந்தும், ஜனாதிபதி ஒரு பக்கமும் பாராளுமன்றம் இன்னொரு பக்ககும் இயங்குமாக இருந்தால் நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மீண்டும் வீழ்ச்சியடையும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment