TamilsGuide

திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் - தீர்வு வழங்கப்படும் என்கிறார் டக்ளஸ்

காரைக்கால் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் தொடர்பாக நியாயமான தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் காரைக்கால் திண்ம கழிவு சேகரிப்பு நிலையத்திற்கு இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இதனை குறிப்பிட்டார்

இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில், கடந்த 6 ஆம் திகதி இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதன்காரணமாக குறித்த திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டவரப்பட்டது.

அத்துடன் குறித்த பகுதியில் இருந்து திண்ம கழிவுகளை அகற்றுமாறு கோரி கடந்த 7 ஆம் திகதி பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்

இந்த நிலையிலேயே அமைச்சர் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்துள்ளார்
 

Leave a comment

Comment