TamilsGuide

யாழ்-நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தலமையில் இடம் பெற்றது.

நெல்லியடி பேருந்து  நிலையத்தில் முள்ளிவாயக்கால் கஞ்சி காச்சப்பட்டு பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், தமிழரசு கட்சி பருத்தித்துறை தொகுதி நிர்வாகிகளான பிரசாத், தயாபரன், உட்பட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment