TamilsGuide

வீர தீர சூரன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் புதி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் சீயான் விக்ரம் டி.வி.எஸ் வண்டியில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளுடன் வண்டியை ஓட்டுகிறார். படத்தின் நாயகியான துஷரா விஜயன் வண்டியில் முன்னாடி உட்கார்ந்துக் கொண்டு மகிழ்ச்சியாக சிரித்துப் பேசியபடியுள்ள காட்சிகள் அமைந்துள்ளன. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது.
 

Leave a comment

Comment