Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

ஜப்பான் பேரரசர் பதவி விலகுவதற்கான சட்டவரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Friday 19th May 2017 09:12 AM

Cabinet recognition for the jurisdiction of the Emperor's resignation

ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ பதவி விலகுவதற்கான சட்டவரைபுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிகிடா சுகா மேற்குறித்த சட்டமூலம் இலகுவாக நிறைவேற்றப்படும் என்று அரசு நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ‘நிபுணர் குழுவின் இறுதி பரிந்துரைகளை கருத்திற்கொண்டு பேரரசருக்கான ஏகாதிபத்திய விசேட சட்டதிருத்தத்தை உருவாக்கியுள்ளதுடன் அதற்கு அமைச்சரவையும் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டமூலமானது நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். நாடாளுமன்றிலும் இந்த சட்டமூலத்திற்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

83 வயதான பேரரசர் அகிஹிட்டோவுக்கு புற்றுநோய் சிகிச்சையுடன் இதய சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வயது சவாலாக அமைந்திருப்பதாக கடந்த ஆண்டு பேரரசர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1817 ஆம் ஆண்டின் பின்னர் பேரரசர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதன்முறை என்பதும்  குறிப்பிடத்தக்கது.