Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

கொலம்பியாவில் கப்பல்தள வெடிப்பு சம்பவத்தில் ஆறுபேர் உயிரிழப்பு: விசாரணைகள் ஆரம்பம்

Friday 19th May 2017 09:12 AM

Ship explosion in Colombia

கொலம்பிய துறைமுக நகரான கார்டகேனாவில் கப்பல்தளங்களில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் குறித்து கொலம்பிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தீயணைப்பு அதிகாரிகள், வாயுத் தாக்கமே வெடிப்பு சம்பவத்திற்கு காரணமாக அமையலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார். மேலும், சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான Astivik  கப்பல்தளத்தில் கடந்த புதன்கிழமை மேற்படி வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. 30 நிமிடங்கள் இடைவெளியில் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றது. இதன்போது ஆறு பேர் உயிரிழந்ததுடன் மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

மேற்படி கப்பல் கட்டும் தளமானது கார்டகேனாவின் சுற்றுலா மையம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கரீபியன் துறைமுகத்தின் தொழில்முறை பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.