Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த சுமார் 2,000 அகதிகள்

Monday 17th Apr 2017 17:14 PM

இத்தாலியில் மட்டுமே சுமார் 29,000 அகதிகள் மீட்கப்பட்டு தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் தத்தளித்த சுமார் 2,000 அகதிகள் மீட்கப்பட்டதாக இத்தாலி கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.சிசிலியையொட்டிய பகுதியில் மத்தியதரைக் கடலில் வெவ்வேறு படகுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மீட்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இத்தாலியைச் சேர்ந்த ஒரு மீட்புக் கப்பல் 504 அகதிகளை நடுக்கடலிலிருந்து மீட்டு சிசிலியின் பொஸால்லோவில் கரை சேர்த்தது. மற்றொரு மீட்புக் கப்பல் சுமார் 500 அகதிகளை மீட்டு சிசிலியின் ஆகஸ்டாவில் உள்ள முகாமில் சேர்த்தது. சார்டீனியாவில் 3 சிறு மரப்படகுகளில் வந்த 43 பேர் மீட்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை இரவு முதல் நடைபெற்ற சுமார் 20 மீட்பு நடவடிக்கைகளில் இதுவரை 2,000 அகதிகள் மீட்கப்பட்டு சிசிலியில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரையில், இத்தாலியில் மட்டுமே சுமார் 29,000 அகதிகள் மீட்கப்பட்டு தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.