Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

அப்பிள் நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரியின் சம்பளம் குறைப்பு!

Wednesday 11th Jan 2017 03:05 AM

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை ஆப்பிள் வரலாற்றிலேயே முதல் முறையாக சரிவடைந்துள்ளது.

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை ஆப்பிள் வரலாற்றிலேயே முதல் முறையாக சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் சம்பளத்தில் 15 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் ஐபோனை 2007 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதியன்று ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார். சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் மொத்தம் மூன்று சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது. தொடுதிரை வசதியுடன் அகலமான திரை கொண்ட ஐபாட், மொபைல் போன் மற்றும் இண்டர்நெட் தகவல் பரிமாற்ற சாதனம் ஒன்றை அறிமுகம் செய்தார்.

2007 ஆம் ஆண்டு துவங்கிய விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் அந்நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழாவினை குறிக்கிறது.

விற்பனை சரிவடைந்த நிலையை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் வெளியிட்ட அறிக்கையில் இதுவரை இல்லாத அளவு சிறப்பான ஒன்று வெளியாக இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 8 பல்வேறு புதிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய ஐபோனில் முழுமையான கிளாஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஐபோனில் சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது