Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

7 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற ‘லாலா லேன்ட்’ படம்

Tuesday 10th Jan 2017 10:44 AM

உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நேற்று நடைபெற்றது.

உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நேற்று நடைபெற்றது.

74-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆண்டின் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த படமாக தேர்வு  செய்யப்பட்ட `லா லா லேன்ட்' படம் 7 விருதுகளை வென்றது.

இந்தப் படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகராக ரியான் கோஸ்லிங்கும், சிறந்த நடிகையாக எம்மா ஸ்டோன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறப்பான இசையுடன் கூடிய பாடல்கள் மற்றும் காமெடி கலந்த காதல் படமான `லா லா லாண்ட்' சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர் ஆகிய பிரிவுகளின்கீழ் மொத்தம் ஏழு விருதுகளை அள்ளிச் சென்றது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் சிறந்த திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் அளிக்கப்படும் அந்நாட்டின் மிக உயரிய விருதான பாப்டா விருதுக்கான 11 பிரிவுகளுக்கும் `லா லா லேன்ட்' திரைப்படம் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.