Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

கிம் கர்டாஷியனிடம் துப்பாக்கி முனையில் கோடிக் கணக்கில் கொள்ளை!

Tuesday 10th Jan 2017 06:17 AM

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கிம் கர்டாஷியானிடம் துப்பாக்கி முனையில் கோடிக்கணக்கான

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி பின்னிரவு அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கிம் கர்டாஷியானிடம் துப்பாக்கி முனையில் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்துவரும் கிம் கர்டாஷியான்(35) கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்று பாரிஸ் நகரில் உள்ள மேடலைன் சர்ச் அருகாமையில் உள்ள சொகுசு ஓய்வு இல்லத்தில் தங்கினார்.

கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி சுமார் 3 மணியளவில் இந்த ஓய்வு இல்லத்துக்குள் புகுந்த ஐந்து மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அங்கிருந்த பாதுகாவலர்களை மிரட்டியபடி, கிம் கர்டாஷியானின் படுக்கை அறைக்குள் புகுந்தனர்.

அமெரிக்காவின் பிரபல ராப் இசைப் பாடகரான  கணவர் கேன்யே வெஸ்ட்-டுடன் கட்டிலில் உறங்கி கொண்டிருந்த கிம் கர்டாஷியானை எழுப்பி,  துப்பாக்கி முனையில் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளையின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பாரிஸ் நகரவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த துணிகர கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பாரிஸ் நகர போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் உள்பட சந்தேகத்துக்குரிய 17 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் பாரிஸ் நகரில் கிம் கர்டாஷியன் பயன்படுத்திய சொகுசு காரை ஓட்டிய டிரைவர் என தெரியவந்துள்ளது.