Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

எகிப்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் பலி

Monday 09th Jan 2017 17:44 PM

சோதனைச் சாவடிக்கு வெளியே காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

எகிப்தில் உள்ள வடக்கு சினாயில் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) சோதனைச் சாவடிக்கு வெளியே காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

மேலும் பாதுகாப்புப் படையினர் சிலரை, துப்பாக்கி ஏந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தற்கொலைப் படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எகிப்தில் உண்டான கிளர்ச்சிக்கு பிறகு, அந்நாட்டின் ராணுவத்துக்கு தீவிரவாத அமைப்புகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.