Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

மொசூல் நகரில் டைக்ரீஸ் நதிக்கரையை ஈராக்படை கைப்பற்றியது!

Monday 09th Jan 2017 06:55 AM

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ள இடங்களை இரு நாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருகின்றன.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ள இடங்களை இரு நாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருகின்றன.

ஈராக்கில் பெரும்பகுதியை அந்த நாட்டு ராணுவம் மீட்டு உள்ளது. தற்போது ஈராக்கின் 2-வது பெரிய நகரமான மொசூல் மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. இதை மீட்பதற்காக ஈராக் படை கடந்த அக்டோபர் மாதம் தாக்குதலை தொடங்கியது.

இரு தரப்புக்கும் நடந்த கடும் சண்டைக்கு பிறகு மொசூல் நகரை சிறிது சிறிதாக ஈராக் படை மீட்டு வருகிறது. நகரின் கிழக்கு பகுதியில் இருந்தும், தெற்கு பகுதியில் இருந்தும் படைகள் முன்னேறி வருகின்றன.

ஐ.எஸ். தீவரவாதிகளின் எதிர்தாக்குதல் கடுமையாக இருந்ததால் முன்னேற்றம் தடைபட்டு வந்தது. மேலும் ஈராக் ராணுவ தரப்பிலும் உயிரிழப்பும் அதிகமானது.

எனவே சிறிது காலம் தாக்குதலை நிறுத்தி இருந்து ஈராக் ராணுவம், கடந்த 2 வாரத்துக்கு முன்பு மீண்டும் தீவிர தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து அந்த படைகள் பல பகுதிகளிலும் முன்னேறி உள்ளது.

மொசூலில் உள்ள பலாடியத், சுக்காத் ஆகிய பகுதிகளை கைப்பற்றி உள்ள ராணுவம் தொடர்ந்து முன்னேறியது. மொசூல் நகரின் நடுவே டைக்ரீஸ் நதி ஓடுகிறது. இதன் மேற்கு பகுதி முழுவதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தது.

கிழக்கு பகுதி வழியாக முன்னேறிய ராணுவம் தற்போது டைக்ரீஸ் நதியின் கரைப்பகுதியை கைப்பற்றி உள்ளது. ராணுவம் முன்னேறி வந்ததை அடுத்து அங்கிருந்த பாலத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்து விட்டனர். ஆற்றின் மறுமுனையில் நிற்கும் ராணுவம் ஆற்றை கடந்து உள்ளே செல்வதற்கு முயற்சித்து வருகிறது.

இந்த நகரில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். இவர்களில் 1 லட்சம் பேர் நகரை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். மற்றவர்கள் இன்னும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலேயே இருக்கின்றனர்.

அவர்கள் உணவு, தண்ணீர் கூட கிடைக்காமல் தவிக்கிறார்கள். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையால் அப்பாவி மக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.