Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 18 போலீசார் பலி

Thursday 14th Sep 2017 09:05 AM

world

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தின் ஆரிஷ் நகர் அருகே போலீசார் இன்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற பாதையில் புதைத்து வைத்திருந்த குண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில், போலீசாரின் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.

அதில் இருந்த போலீஸ்காரர்களில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக, அதன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எகிப்தில் முகமது முர்சியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்ததையடுத்து, பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஏராளமான ராணுவ வீரர்களும், போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 3 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சகம் எந்த குறிப்பையும் வெளியிடவில்லை.