Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான குரல்கள்

Wednesday 13th Sep 2017 20:03 PM

உலகளாவிய கையெழுத்து இயக்கம்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் கேட்போர் கூடத்தில் இலங்கைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான குரல்கள் ஒலித்துள்ளன.

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளிளையொட்டி கருத்தரங்கொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

சிறிலங்காவைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் பிரதிநிதி அன்றூ உட்பட பிரித்தானிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், நா.தமிழீழ அரசாங்க அமைச்சர் மணிவண்ணன் ஆகியோர் பிரதான கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

 

காணமல் ஆக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி உலகளாவிய கையெழுத்து இயக்கம் ஒன்றிளை நா.தமிழீழ அரசாங்கம் தொடங்கியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.