Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

40 மண­மக்­க­ளுக்கு இல­வச திரு­ம­ண­த் திட்டம்

Tuesday 12th Sep 2017 17:05 PM

பிரித்­தா­னிய சைவ­முன்­னேற்றச் சங்கம்

பிரித்­தா­னிய சைவ­முன்­னேற்றச் சங்கம் தனது 40 ஆண்டுப் பூர்த்­தி­யை முன்­னிட்டு அகில இலங்கை இந்­து­மா­மன்­றத்­துடன் இணைந்து 40 மண­மக்­க­ளுக்கு இல­வச திரு­ம­ண­த் திட்டம் ஒன்­றி­னை ­ந­டத்­த­வுள்­ளது.

எதிர்­வரும் 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மை­ காலை 6.17 முதல் 8.33 வரை­யுள்­ள ­சு­பமு­கூர்த்­த வே­ளையில் பம்­ப­லப்­பிட்டி, சம்­மாங்­கோடு ஸ்ரீ மாணிக்­க­ வி­நா­யகர் ஆலய மண்­ட­பத்தில் இத் திரு­ம­ண­ வை­பவம் நடை­பெ­ற­வுள்­ளது.

திரு­மண வய­தினை அடைந்தும் வறுமை நிலை­ கா­ர­ண­மாக திரு­மண பந்­தத்தில் இணை­ய­ மு­டி­யா­ம­லி­ருக்கும் 40 மண­மக்கள் தெரி­வு ­செய்­யப்­பட்டு இத் திட்­டத்தின் கீழ் திரு­மணம் செய்­து­வைக்­கப்­ப­ட­வுள்­ளனர். ஒவ்­வொ­ரு­ம­ண­மக்­க­ளுக்கும் தாலி, கூறைப்­பு­டவை, பட்­டு­, வேட்­டி­ சால்வை, இரண்­டு­மோ­தி­ரங்கள் ஆகி­ய­வற்­றுடன் வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் திருமணச் செலவுக்கென நிதியுதவியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது