Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

தடையை மீறி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரிய பொருட்கள் ஏற்றுமதி

Tuesday 12th Sep 2017 02:52 AM

ஐக்கிய நாடுகள் சபை இதனை சுட்டக்காட்டியுள்ளது.

தடையை மீறி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரிய பொருட்கள் ஏற்றுமதி

ஐக்கிய நாடுகள் சபையால் விதிக்கப்பட்ட தடையை மீறி, இலங்கை, மலேஷியா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வட கொரியா நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பல பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, கடந்த ஆகஸ்ட்டுடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 270 டொலர் பெறுமதியான பொருட்களை அந்த நாடு இவ்வாறு ஏற்றுமதி செய்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை வௌியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே, ஐக்கிய நாடுகள் சபை இதனை சுட்டக்காட்டியுள்ளது.

மேலும், அணு ஆயுத பரிசோதனை உள்ளிட்ட தடைகளையும் வட கொரியா தொடர்ந்தும் மீறி வருவதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.