Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

கட்டார் நெருக்கடி நிறைவடையுமா?? முக்கிய சந்திப்பு

Sunday 10th Sep 2017 03:55 AM

Will the Qatar crisis end? Important meeting

கட்டார் நெருக்கடி தொடர்பில் சவூதி மன்னர் சல்மானுடன், கட்டார் மன்னர் தமிம் ஃபின் ஹமாட் அல் தானி தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த தகவலை சவூதி தொலைத் தொடர்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த உரையாடலில் கட்டார் நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருப்பதாக இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டார் மீது இந்த நாடுகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் விவாதிப்பதற்கு தயார் என கட்டார் இளவரசர் தெரிவித்துள்ளார்.

எனினும், இரு நாட்டுத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டார் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கட்டாருடனான தங்களது அனைத்து விதமான உறவுகளையும் முறித்துக் கொண்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் கட்டார் நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் நடுநிலைமை வகிக்க தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே, சவூதி மன்னர் சல்மான் கத்தார் இளவரசர் ஷேக் தமீம் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.