Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு சீன துணைப் பிரதமர் விஜயம்

Sunday 13th Aug 2017 09:47 AM

Visit of Chinese Deputy Prime Minister to Pakistan

பாகிஸ்தானின் 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில், சீனாவின் உயர்மட்ட தூதுக் குழுவினர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

பாகிஸ்தானின் 70ஆவது சுதந்திரம் தினம் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் பணிப்பின் பேரில், சீனாவின் துணைப் பிரதமர் வாங் யங் தலைமையிலான தூதுக் குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பாகிஸ்தான் செல்லவுள்ளனர். இன்று புறப்பட்டுச் செல்லும் இந்தக் குழுவினர், அங்கு நடைபெறும் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.  என சீன வெளிவிவகார அமைச்சு தெரவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கான இவரது விஜயம் ஒரு மைல்கல் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் இவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இவரது விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையில் இரு தரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படும் எனறும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், 50 பில்லியன் டொலரைக் கொண்ட சீன –பாகிஸ்தான் பொருளாதார திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்விலும் இவர் கலந்துகொள்ளவுள்ளார்.