Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

சுமாத்ராவில் நில அதிர்வு: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

Sunday 13th Aug 2017 09:44 AM

Tsunami Warning: Tsunami Warning!

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை குறித்து இலங்கையின் கரையோர மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிற்கருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு காரணமாக அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.