Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

சர்வதேச பீரங்கிப் போட்டி

Saturday 12th Aug 2017 19:38 PM

இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்தது இந்தியா.

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச பீரங்கிப் போட்டியில் இந்தியத் தரப்பில் பங்கேற்ற இரண்டு பீரங்கிகளும் நடுவழியில் நின்றது. இதனால் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்தது இந்தியா.


பீரங்கிகளின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 19 நாடுகள் பங்கேற்ற சர்வதேச டாங்க் பையாத்லான் என்ற போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ பகுதியில் நடைபெற்றது. இதில் இந்தியத் தரப்பில் இரண்டு டி-90 பீரங்கிகள் போட்டியில் கலந்துகொண்டன.

போட்டியில் பங்கேற்ற இரண்டு டி-90 பீரங்கிகளும் அரையிறுதிப் போட்டியின்போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியிலேயே நின்றுபோனது. இதனால் இறுதிச்சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இந்தியா இழந்தது. ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், பெலாரஸ் ஆகிய நான்கு நாடுகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.