Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

கடற்கரையில் பயங்கரம் , இரத்தம் குடிக்கும் கடல் பேன்கள்

Saturday 12th Aug 2017 05:49 AM

Terror on the beach, bloody sea lice

இரத்தம் குடிக்கும் காட்டேரி  வௌவால்கள்(Vampire Bats) பற்றி கேள்விப்பட்டுள்ளோம். இரத்தம் உறிஞ்சும் கடல் பேன்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ?

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரக் கடற்கரை ஒன்றில் திகிலூட்டும் இந்தப் பயங்கரம் நடந்துள்ளது .

சாம் கனிசே Sam Kanizay என்ற 16வயது இளைஞன் ஒருவன் இங்கு Brighton என்று அழைக்கப்படும் கடற்கரையில் , நண்பர்களுடன் பந்து விளையாடிய பின்னர் , கால்களைக் கழுவிக் கொள்ள , கடற்கரைக்கு சென்றுள்ளான்.

அவன் சில நிமிடங்களில் கரையேறியபோது , அவன் கால்களைப் பார்த்து எல்லோருமே அதிர்ந்து போனார்கள் . முழந்தாளுக்கு கீழே அவன் கால்கள் குருதியில் தோய்ந்து போயிருந்ததே காரணம் !

 கால்களில் இருந்து வடியும் இரத்தத்தை நிறுத்த முடியவில்லை . உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது மருத்துவர்களாலும் காரணத்தை அறிய முடியாமல் குழம்பிப் போனார்கள் . மிகச் சிறிய துவாரங்கள் காலெங்கும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது .

இறுதியில் இதற்கான காரணம் கடல் பேன்கள் என்று அறியப்பட்டுள்ளது . இந்த இளைஞனது தந்தை , மகன் கால் கழுவச் சென்ற இடத்தில் , மிகச் சிறிய கடல் பேன்களைப் பிடித்துள்ளார் . ஒரு சிறு மாமிசத் துண்டை போட்டதும் , இவை அவற்றை வந்து மொய்ப்பதாகக் கூறி இருக்கிறார் .

அதில் உள்ள இரத்தம் முழுவதும் உறிஞ்சப்பட்டு வெறும் சக்கை  போன்று இறைச்சி மாறி இருப்பதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்