Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

அகில உலகத் தலைவராக திரு. வி. சு. துரைராஜா அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டள்ளார்.

Saturday 12th Aug 2017 02:13 AM

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்
அகிலத் தலைவராக வி. சு. துரைராஜா
அகில செயலாளர் நாயகமாக துரை கணேசலிங்கம்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு இலங்கை யாழ்ப்பாணத்தில் யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெற்றி விழாவாக சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த இயக்கத்தின் அடுத்த வருடத்திற்கான அகில உலகத் தலைவராக கனடாவை வதிவிடமாகக் கொண்டுள்ள திரு. வி. சு. துரைராஜா அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டள்ளார்.
அதேபோன்று அகில உலகப் பொதுச் செயலாளர் நாயகமாக தொடர்ந்தும் 26 ஆவது வருடமாக ஜேர்மனியை வதிவிடமாகக் கொண்டுள்ள திரு. துரை கணேசலிங்கம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இயக்கத்தின் பல்வேறு பதவிகளுக்கும் மாநாட்டில் கலந்து கொண்ட இயக்கத்தின் உலக நாட்டு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் பலரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களது பதவிகள் இயக்கத்தின் யாப்பு திருத்த்த்தின் பின்னர் அது பொதுச் சபைக்கு விடப்பட்டு உலக நாடுகளின் அமைப்புக்களின் அங்கீகாரத்துடன் பதவிகள் அறிவிக்கப்படும் என அகிலத் தலைவர் திரு. வி. சு. துரைராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.