Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

இளங்கலைஞர் மன்றத்தின் இசை விழா ஆரம்பம்

Friday 19th May 2017 20:30 PM

நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்றத்தின் 38 ஆவது இசைவிழா


.
 இன்று 19.05.2017 ஆரம்பமாகியது. இது தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.
.
இன்றைய முதலாம் நாள் விழா பிற்பகல் 5 மணிக்குநடைபெற்றது.
.
யாழ். பல்கலைக்கழக மொழியியல்துறைப் பேராசிரியர் சுபதினி ரமேஷ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
.
ம.கோபிராஜ், இ.சம்யுதன் ஆகியோரின் நாதஸ்வர இசை, இளங்கலைஞர் மன்றப் பயிலுநர்களின் குழுப்பாடல், க.தேசிகனின் புல்லாங்குழல் கச்சேரி, சங்கீத பூஷணம் ஏ.கே. கருணாகரனின் இசைக்கச்சேரி, க.நிஷிவர்மனின் நெறியாள்கையில் சீதா சுயம்வரம் என்ற நாட்டிய நாடகம், சிறுப்பிட்டியூர் சத்தியதாஸ் வில்லிசைக் குழுவினரின் வில்லிசை ஆகிய நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
.

இசைவிழா 20.05.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கும் 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கும் மற்றும் 4 மணிக்கும் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
.
1971 ஆம் ஆண்டில் இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இளங்கலைஞர் மன்றத்தில் தற்போதும் வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, பண்ணிசை, நடன வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
.
தற்போது இளங்கலைஞர் மன்றத்தின் தலைவராக வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானமும் துணைத்தலைவராக சங்கீத பூஷணம் சி.பத்மலிங்கமும் செயலாளராக நல்லை க. கண்ணதாசும் இணைச் செயலராக மகாராணி சோமசுந்தரமும் பொருளாளராக கவிஞர் இ.குகதாசனும் செயற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.